ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை
ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. இந்த ஆசை இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இந்த ஆசை இருக்கத்தான் செய்கிறது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. "எக்ஸ்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.
கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் "ஒய்" குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகுநாட்கள் கழித்து சந்திக்கும் கணத்தில் நம் விழி பொங்கும் கண்ணீரில் கப்பல்விடக் காத்திருக்கிறது காதல்!
Pages
Search This Blog
Thursday, June 10, 2010
தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்
தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்
1. அதிகாலையில் எழுந்து படித்தால் அது மனதில் அழுத்தமாகப் பதியும். தினமும் அதிகாலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. அமைதியான இடத்தில் வசதியாக அமர்ந்து படிக்க வேண்டும்.
3. படிப்பதை ஒரு முறை எழுதிப் பார்க்கலாம். இப்படி எழுதிப் பார்ப்பது மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்து விடும்.
4. அன்றைய பாடங்களை அன்றே திட்டமிட்டுப் படித்து விடுங்கள். நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது பின்னால் சுமையாகிப் போய் விடும்.
5. விடுமுறை நாட்களில் அனைத்துப் பாடங்களையும் ஒரு முறை திருப்பிப் படித்துக் கொள்ள வேண்டும்.
6. நண்பர்களுடன் உரையாடும் போது பாடங்கள் குறித்து அதிகமாகப் பேச வேண்டும். நமக்குள் இருக்கும் சில சந்தேகங்கள் அகலலாம்.
7. தேர்வு நாட்களில் மதிய உணவிற்குப் பின்பு இரண்டு மணி நேரம் தூங்கினால் நல்லது. இது புத்துணர்வை அளிக்கும்.
8. தேர்வு நாட்களில் அதிக நேரம் படிக்கிறேன் என்று அதிகமான நேரம் கண்விழித்துக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நாட்களில் குறைந்தது ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டும்.
9. இரவு படித்து முடித்து படுக்கைக்குச் செல்லும் முன்பு படித்ததை நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
10. தலைப்புகளின் வழியே சிறு குறிப்புகள் தயாரித்து தேர்வுக்கு முன்பு படித்துச் செல்லலாம்.
11. தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு முன்பே சென்று விட வேண்டும்.
12. வினாத்தாளை முதலில் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் முதலில் பதில் அளிக்க வேண்டும். வினா எண், பக்க எண் போன்றவைகளை சரியாக எழுதி விட வேண்டும்.
13. தேர்வுக்கான முழு நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்வு நேரம் முடியும் முன்பு நாம் அளித்துள்ள பதில்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரி செய்து கொள்ள வேண்டும்.
14. தேர்வு முடியும் முன்பு விடைத்தாள்களைக் கட்டி மொத்தப்பக்கங்கள், கூடுதல் விடைத்தாள்கள் போன்றவைகளை சரியாக எழுத வேண்டும்.
15. உரக்கப் படிப்பதை விட மனத்திற்குள் பதியும்படி படிக்க வேண்டும்.
16. தேர்வுக்குச் செல்லும் போது சாப்பிடாமல் செல்லக்கூடாது. அதனால் ஏற்படும் களைப்பு பதில் அளிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
17. குறிப்பிட்ட வினாவிற்கு பதில் அளிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
18. தேர்வு எழுதும் போது விடையளிப்பதில் மட்டுமே கவனமிருக்க வேண்டும். சுற்றிலும் பார்த்துக் கவனத்தை திசை திருப்பி விடக்கூடாது.
19. விடைத்தாள் திருத்துபவர்கள் மனதில் நம் விடைத்தாள்கள் நல்ல நிலையில் எழுத்துக்களை அழகாகவும் போதுமான இடைவெளி விட்டு தலைப்புகள் தனியே தெரியும்படி அடிக்கோடிட்டும் இருந்தால் நன்றாக இருக்கும்.
20. விடைத்தாளில் வினாக்களுக்கு படங்கள் அவசியமெனில் படங்களை வரைந்து தேவையான வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான குறிப்புகளையும் எழுதுங்கள்.
இந்த குறிப்புகளை மட்டும் நீங்கள் கடைப்பிடித்துப் பாருங்கள்... உங்கள் தேர்வு முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்தை விட நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

Friday, May 28, 2010
யோகா கலை
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.
ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.
இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.
யாருக்கு பயன் ?
இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.
இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.
இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.
யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா ?
உட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா. கீழே சற்று விரிவாக வகைப்படுத்தியுள்ளேன்..
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு)
இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்
பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா
என்று பிரிவுகள் உண்டு...
ஒவ்வொன்றையும் விளக்கி வாசகர்களைத் துயிலில் ஆழ்த்த நான் விரும்பவில்லை எனினும், யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது என்பதையும் ஆழமாகப் பதிக்க விரும்புகிறேன்.
கர்ப்பிணிப் பெண்ணொருவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.
யோகா மேற்கத்திய நாடுகளில் சிறப்பான முறையில் சந்தைப்படுத்தப்படும் காட்சிகள்.
இருவர் இணைந்து செய்யும் பயிற்சி முறைகளும் உண்டு.
மேலேயுள்ள படத்தில் பாருங்கள். இது போன்ற கடினமான ஆசனப்பயிற்சி தான் யோகா என்று இல்லை. மென்மையாக, உடலுக்கு எந்த விதமான துன்பத்தையும் தராத சிறந்த பயிற்சிகள் உண்டு.
யோகா ஆசிரியர் ( கவனியுங்கள் - இந்தியர் அல்லர் ) ஒருவர் தன்னுடைய மாணாக்கரைப் பழக்கும் காட்சி.
ஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்துப் பழகுவது முழுமையான பலன் தராது. ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்.
சக்கரம்,வட்டம் என்று புரியாத விடயங்களைச் சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு. யோகா என்ற பெயரில் குனிந்து நிமிரவைத்து பணத்தைப் பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள். அதனால் நல்ல தரமான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது முதற்படியாக இருக்கட்டும்.
வெளிநாடுவாழ் இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக. நான் அவரிடம் வினவியது, நண்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்குத் தெரிந்து நீர் எந்தப் பயிற்சிக்கும் சென்றதில்லையே என்று. அவரின் பதில் என்ன தெரியுமா?
"இணையம் எதற்கு இருக்கிறது?" என்பதே. அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையைக் கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாகப் பயின்று பிறகு தொடங்க வேண்டும். சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நண்பர்கள் முன்வரவேண்டும். எங்கள் நிறுவனத்தில் யோகாப் பயிற்சியாளரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய். அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயற்படுகிறார். ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அன்று, உபயோகமாகவும் செயற்படுத்தும் முறை உள்ளது

Thursday, May 27, 2010
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் தெரியுமா?
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் தெரியுமா?
இந்து மதத்தில் சைவ சமயத்தால் சிவ வழிபாட்டின் மூலம் புகழடைந்த அறுபத்தி மூன்று நாயன்மார்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?
1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்
8.இயற்பகையார்
9.இளையான்குடி மாறன்
10.உருத்திரபசுபதியார்
11.எறிபத்தர்
12.ஏயர்கோன்கலிக்காமர்
13.ஏனாதி நாதர்
14.ஐயடிகள் காடவர் கோன்
15.கணநாதர்
16.கணம் புல்லர்
17.கண்ணப்பர்
18.கலிக்கம்பர்
19.கலியர்
20.கழறிற்றறிவார்
21.கழட்சிங்கர்
22.காரியார்
23.குங்கிலியக்கலயர்
24.காரைக்கால்
25.குலச்சிறையார்
26.கூற்றுவார்
27.கோச்செங்கட்சோழர்
28.போட்புலியார்
29.சடையனார்
30.சண்டேசுரர்
31.சந்தியார்
32.சாக்கியர்
33.சிறுப்புலியார்
34.சிறுத்தொண்டர்
35.சுந்தரர்
36.செருத்துணையார்
37.சோமாசிமாறர்
38.தண்டியடிகள்
39.திருக்குறிப்புத்தொண்டர்
40.திருஞானசம்பந்தர்
41.திருநாவுக்கரசர்
42.திருநாளைபோவார்
43.திருநீலகண்டர்
44.திருநீலகண்டயாழ்பாணர்
45.திருநீலநக்கர்
46.திருமூலர்
47.நமிநந்தியடிகள்
48.நரசிங்கமுனையாரையர்
49.நின்றசீர்நெடுமாறர்
50.நேசர்
51.புகழ்ச்சோழர்
52.புகழ்த்துனையார்
53.பூசலார்
54.பெருமிழவககுரும்பர்
55.மங்கயற்கரசியார்
56.மானக்கஞ்சாறர்
57.முருகர்
58.முனையடவார்
59.மூர்க்கர்
60.மூர்த்தியார்
61.மெய்ப்பொருளார்
62.வாயிலார்
63.விறண்மிண்டர்

Saturday, April 10, 2010
கிருபானந்தவாரியார்
கண்டவை, கற்றவை, கேட்டவை
கிருபானந்தவாரியார்
கிருபானந்தவாரியார் விமானத்தில் மரணம்: வெளிநாட்டில் இருந்து திரும்பும்போது உயிர் பிரிந்தது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பும்போது, விமானத்திலேயே கிருபானந்த வாரியார் மரணம் அடைந்தார். பக்த கோடிகளால் “ஞானப்பழம்” என்றும், “வாரியார் சுவாமிகள்” என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர் பக்தபிர முகர் கிருபானந்தவாரியார்.
நகைச்சுவை
கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர்பட்ட பாடு. அவர் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கிவிடுவார்கள். சொற்பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர்.
லண்டனுக்கு பயணம்
வாரியார் பல முறை வெளிநாடுகளுக்கு சென்று சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறார். அவர் போகாத வெளிநாடு இல்லை. வெளிநாடுகளில் பக்தி சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக 1993ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ந்தேதி கிருபானந்தவாரியார் லண்டன் சென்றார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
லண்டன் போய்ச் சேர்ந்ததும் அவருக்கு மார்பில் சளி ஏற்பட்டு, நெஞ்சுவலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. எனவே, கிருபானந்த வாரியார் லண்டனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சென்னைக்கு திரும்ப ஏற்பாடு
அங்கு, டாக்டர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர் குணம் அடைந்தார். 15 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அவரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நவம்பர் 6-ந்தேதி மாலை கிருபானந்த வாரியார் விமானம் மூலம் லண்டனில் இருந்து புறப்பட்டார். அவருடன் தம்பி மகன்கள் டாக்டர் திருஞானசிவம், அருள்நந்தி ஆகியோரும் வந்தனர். விமானத்தின் முதல் வகுப்பில் கிருபானந்த வாரியார் பயணம் செய்தார். மற்ற இருவரும் 2-ம் வகுப்பில் உட்கார்ந்து வந்தனர்.
விமானத்தில் உயிர் பிரிந்தது
விமானம் மறுநாள் (7-ந்தேதி) அதிகாலை 4-30 மணிக்கு மும்பை வந்து பின்னர் 6 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் முன்பு டாக்டர் திருஞானசிவம், முதல் வகுப்பில் உட்கார்ந்திருந்த கிருபானந்த வாரியாரின் உடல் நிலையை பரிசோதித்தார். அப்போது வாரியார் உடல் நிலை சீராக இருந்தது. எனவே டாக்டர் திருஞானசிவம் அவரது இருக்கையில் சென்று உட்கார்ந்து கொண்டார். இதன் பின்பு விமானம் காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதற்கிடையில் கிருபானந்த வாரியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்சு வண்டி வந்திருந்தது. டாக்டர்களும் வந்திருந்தனர். வரவேற்பு அளிப்பதற்காக ஏராள மான பிரமுகர்களும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். விமானம் கீழே இறங்கியதும் டாக்டர் திருஞான சிவமும், அருள் நந்தியும் கிருபானந்த வாரியாரை அழைத்துச் செல்வதற்காக வாரியாரின் இருக்கை அருகே சென்றனர். அப்போது அவர் உறங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே இருவரும் வாரியார் உறங்குகிறார் என்று நினைத்து அவரது உடலை அசைத்து அழைத்தபோது, அவர் மரணம் அடைந்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு மனம் பகீரென்றது. விமான நிலையத்தில் தயாராக நின்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் “ஆக்சிஜன்” மற்றும் செயற்கை சுவாசம் கொடுத்து கிருபானந்த வாரியாரின் இதயத்தை இயங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் டாக்டர்களின் முயற்சி பயன் அளிக்கவில்லை.
வளர்ப்பு மகன் வீட்டில்
பின்னர் விமானத்தில் இருந்து வாரியாரின் உடல் தூக்குப்படுக்கையில் (ஸ்டிரச்சர்) விமானத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு ஆம்புலன்சு வேன் மூலம் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வளர்ப்பு மகன் கோடிலிங்கம் (இவர் கிருபானந்த வாரியாரின் தம்பி மகன்) வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வாரியாரின் உடல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டது. ஏராளமான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பக்தர்கள், வியாபாரிகள், பிரமுகர்கள் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தலைவர்கள் மரியாதை
முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் நெடுஞ்செழியன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கிருபானந்த வாரியாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்கள் கலங்கின. வாரியாரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். முன்னாள் மேல் சபை தலைவர் ம.பொ.சிவஞானம், வைகோ, குமரிஅனந்தன் உள்பட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அனுதாப செய்தியில், “முருகப்பெருமானின் பெருமைகளைப் பரப்பு வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் மறைவு ஆன்மீகத் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்” என்று குறிப்பிட்டார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், “ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.
சொந்த ஊருக்கு
கிருபானந்த வாரியாரின் சொந்த ஊர் வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூர் ஆகும். அங்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே “சரவண பொய்கை குளம்” என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. மழை கொட்டியது. அதை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்துக்கொண்டு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினார்கள். சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், வாரியார் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். “வேல் உண்டு வினை தீர்க்க மயில் உண்டு” என்ற பாடலை வாரியார் உடல் அருகே இருந்து மனம் உருக பாடினார். அருணகிரி நாதரின் பாடல்களையும் அவர் தொடர்ந்து பாடினார்.
சமாதி ஆனார்
மாலையில் வாரியார் உடல் இறுதி ஊர்வலம் புறப்பட்ட முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் சரவண பொய்கை மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது. இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். வாரியார் உடலை அங்கு 6 அடி ஆழம், 5 அடி அகலத்தில் வெட்டப் பட்ட குழியில் இறக்கினார்கள். அங்கு கூடியிருந்தவர்கள் சிவ புராணம் பாடினார்கள். பின்னர் அந்த குழியில் விபூதி, உப்பு, செங்கல் தூள் ஆகியவற்றை நிரப்பினார்கள். அதன் மேல் பகுதியில் 6 கருங்கல் பலகையை பரப்பி அதன் மீது சிமெண்டால் பூசினார்கள். கிருபானந்த வாரியார் 6 மணிக்கு சமாதி நிலையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பள்ளிக்கூடம் போகாதவர்
கிருபானந்த வாரியாரின் தந்தை பெயர் மல்லையாதாசர் பாகவதர். பக்தி சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். தாயார் பெயர் கனகவல்லி அம்மாள். இவர்களுக்கு 11 பிள்ளைகள். இதில் 4வதாக பிறந்தவர் வாரியார். 1906ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ந்தேதி வாரியார் பிறந்தார்.வாரியார் 3 வயது குழந்தையாக இருந்தபொழுதே அவரது தந்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். இதனால் தனது 5 வயதிலேயே தானே புத்தகங்களை படிக்க தொடங்கி விட்டார். பள்ளிக்கூடம் அனுப்பினால் கெட்டு விடக்கூடும் என கருதிய அவரது பெற்றோர்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வில்லை. அவரது தந்தையே வீட்டில் இருந்து படிப்பு சொல்லிக்கொடுத்தார்.
அதிகாலை 5 மணிக்கே எழுந்துவிடவேண்டும். 5.30 மணிக்குள் குளித்துவிடவேண்டும். 6 மணியில் இருந்து 7 மணி வரை இசைப்பயிற்சி. 7 மணிக்கு பிறகு நன்னூல் முதலிய இலக்கண படிப்பு. பிற்பகலுக்கு பிறகு தேவாரம், திருப்புகழ், சரித்திர கீர்த்தனை முதலியவற்றை அவரே கையால் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவேண்டும். இரவு நேரத்தில் சரித்திர பாடங்களை சொல்லிக்கொடுப்பார். தந்தையின் கடுமையான பயிற்சியினால் வாரியார் தனது 12 வயதுக்குள்ளேயே பதினாறாயிரம் பாடல்களை மனப்பாடம் செய்து பாராட்டு பெற்றார். 8 வயதில் வெண்பா முழுக்க தெரிந்தவர் வாரியார். இளம் வயதிலேயே தந்தையாருடன் சேர்ந்து சிறு சிறு கூட்டங்களில் சொற்பொழிவு செய்தார். பிற்காலத்தில் மக்களை வசீகரித்த மிகப்பிரபலமான சொற்பொழிவாளர் ஆனார்.
தந்தைக்காக சமாதி கட்டினார்
வாரியாருக்கு தந்தை மல்லையாதாசர் மீது அளவு கடந்த பாசம் உண்டு. அவரை கோவில் கட்டி கும்பிடவேண்டும் என்று வாரியார் நினைத்தார். இதனால் தந்தை உயிரோடு இருக்கும்பொழுதே அவருக்காக சமாதிக்கோவில் கட்டி வைத்தார். அதை அவரது தந்தை சென்று பார்த்து, “என் மகன் எனக்கு சமாதிக்கோவில் கட்டி வைத்திருக்கிறான்” என்று கூறி மகிழ்ந்து கூறுவார். வாரியாரின் தந்தை 1950ம் ஆண்டு காலமானார். அவரது உடல் வாரியார் கட்டிய சமாதி கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் லிங்கம் ஒன்றை அமைத்தார். தாயார் இறந்ததும் அவரது உடலையும் அங்கேயே அடக்கம் செய்தார்.
திருமணம்
வாரியார் தனது 19வது வயதில் தாய்மாமன் மகள் அமிர்தலட்சுமி அம்மாளை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. வாரியார் இறப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தலட்சுமி அம்மாள் மரணம் அடைந்துவிட்டார்.
முருக பக்தர்
வாரியார் தீவிர முருக பக்தர். அதற்கு காரணம் அவரது தந்தை மல்லையாதாசர் முருகபக்தராக இருந்ததுதான். உலகில் எங்கெங்கு முருகர் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் “வயலூர் எம்பெருமான்…” என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.
வாரியார் சினிமாவிலும் தோன்றி இருக்கிறார். சின்னப்ப தேவரின் அன்புக்கு கட்டுப்பட்டு முதலில் “துணைவன்” என்ற படத்தில் தோன்றினார். பிறகு “திருவருள்”, “தெய்வம்” ஆகிய படங்களிலும் தோன்றினார்.

Subscribe to:
Posts (Atom)
Followers
About Me
- vetrigee
- kattumannarkoil, chidambaram, tamilnadu, India
- கொடியை விட்டு பிரிந்த கிளை துளிர்ப்பதுவும் இல்லை – இறை வழியை விட்டு விலகி விட்டால் வாழ்க்கையது இல்லை.